Advertisment

பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜூ கதாபாத்திரம் பெயர் வெளியீடு!

Mamitha

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'Dude'. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் குறள்என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு புஷ்பா’, ‘குட் பேட் அக்லிபோன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான 'Dude'-ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை மமிதா பைஜூ பகிர்ந்து கொண்டதாவது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ‘Dude’ படத்தில் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரப் பெயர் குரல். ‘Dude’ படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன்என்றார்.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

tamilcinemaupdates Mamitha Baiju Pradeep Ranganathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe